‘அரபிக் குத்து’ பாடல் மூலம் பிரபலமான பாடகி ஜோனிடா காந்தி, இப்போது கதாநாயகியாக மாறிவிட்டார். இவ்வாறு மாற்றியவர் நடிகை நயன்தாரா.
தமிழில் ‘மென்டல் மனதில்’, ‘செல்லம்மா’, ‘மெய் நிகரா’ எனப் பல பாடல்கள் மூலம் ரசிகர்களைத் தன் குரலால் வசீகரம் செய்தவர் ஜோனிடா.
இசைத் துறை சாதனைக்காக அமெரிக்காவின் ‘ரோலிங் ஸ்டோன்’ பத்திரிகையின் அட்டைப் படத்தில் இவரது படம் இடம்பெற்றது.
இளையர்களிடம் ஜோனிடாவுக்கு உள்ள வரவேற்பைக் கண்டு தனது ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நாயகியாக்கிவிட்டார் நயன்தாரா. தற்போது பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் திட்டமிட்டபடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“நயன்தாரா மிகப் பெரிய நடிகை. அவர் என்னை அறிமுகப்படுத்துகிறார் என்றால் அது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. அவருக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.
“சக கலைஞர்கள் வளர வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் இந்த வாய்ப்பும் நன்றியும் பொருந்தும்,” என்று கூறியுள்ளார் ஜோனிடா.