அயோத்தியில் புது வீடு வாங்கியுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.
மும்பையில் இவருக்கு ஏராளமான சொந்த வீடுகள் உள்ளன.
‘ரியல் எஸ்டேட்’ தொழிலில் ஈடுபட்டுள்ள அமிதாப், பல வீடுகள், அலுவலகத் தொகுப்புகளை வாடகைக்கு விட்டுள்ளாராம்.
இந்நிலையில், மும்பைக்கு அடுத்தபடியாக தனது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பக்கம் அமிதாப் பச்சனின் பார்வை திரும்பியுள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரிசையாக நிலங்களை வாங்கி வருபவர், தற்போது அக்கோவிலுக்கு மிக அருகில், 25,000 சதுர அடி நிலத்தை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.40 கோடியாம்.
இங்குப் புதிதாக வீடு கட்டுவது அமிதாப்பின் திட்டம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே அயோத்தியில் மூன்று இடங்களில், 54,000 சதுர அடி நிலத்தையும் வாங்கியுள்ளார் அமிதாப்.
அயோத்தியில் தனது தந்தைக்கு நினைவிடம் கட்டவும் விரும்புகிறாராம்.
தொடர்புடைய செய்திகள்
“பாரம்பரியமும் நவீனத்துவமும் இணைந்திருக்கும் அயோத்தியின் ஆன்மாவுக்குள் இதயப்பூர்வமான பயணத்தின் தொடக்கம் இது. உலகின் தலைசிறந்த ஆன்மீகத் தலைநகரில் எனது வீட்டைக் கட்ட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமிதாப் பச்சன்.
தற்போது அமிதாப் ‘செக்ஷன் 84’, ‘பிரமாஸ்த்ரா’, ‘கல்கி 2898 ஏடி-2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.