திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என்று சூர்யாவின் அப்பா சிவக்குமார் போட்ட கட்டளையால் படத்தில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
அதுமுதல் தொடர்ந்து தனக்கேற்ற கதாபாத்திரங்களில் தமிழ், மலையாளம், இந்திப் படங்களில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நேரத்தில் அவரின் சொத்து, சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் நடிகை ஜோதிகா ஒரு படத்திற்கு நான்கு முதல் ஐந்து கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறார். அது மட்டுமின்றி சென்னையில் 20,000 சதுர அடியில் மாபெரும் வீடு உள்ளது. அத்துடன், மும்பையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் பெரிய அபார்ட்மெண்ட்டும் வைத்து இருக்கிறார்.
மேலும் BMW மற்றும் ஆடி கார்களை வைத்திருக்கும் ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ.333 கோடியாக உள்ளது.
அத்துடன் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனத்தின் மூலமும் வருமானம் வருகிறது. இவை மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்திருக்கிறார் ஜோதிகா. இதன்மூலமாகவே கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார்.
இவர் தனது கணவர் சூர்யாவைவிட அதிக சொத்துகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

