கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம்.
ஜெயம் ரவி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
‘என்னை இழுக்குதடி’ எனத் தொடங்கும் இப்படத்தின் முதல் பாடல், சில வாரங்களுக்கு முன் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள இப்பாடல் யூடியூபில் இதுவரை பத்து மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.