தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கடைசி உலகப் போர்’: புதிய பாடல் காணொளி வெளியீடு

1 mins read
38769a88-963f-4d6e-8160-295640b34804
‘கடைசி உலகப் போர்’ படத்தின் ‘அரசியல் அண்டர்டேக்கர்’ படல் காணொளியில் நட்டி. - காணொளிப் படம்: திங்க் மியூசிக் இந்தியா / யூடியூப்

ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள ‘கடைசி உலகப் போர்’ திரைப்படத்தில் நாசர், நட்டி (நடராஜ்), அனகா, அழகம்பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஸ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

போர் தொடர்பான கதையாக உருவாகி இயக்கும் இந்தப் படத்தை ஹிப் ஹாப் ஆதி, ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து அதன் இயக்குநராகவும் விளங்குகிறார். மேலும் படத்தின் இசையமைப்பாளரும் அவரே. இப்படம் இம்மாதம் 20ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘கடைசி உலகப் போர்’ படத்தில் நட்டி, கிங் மேக்கர் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரின் கதாபாத்திரத்தை விவரிக்கும் வகையில் படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் அண்டர்டேக்கர் என்ற பாடலை படக்குழு காணொளியாக வெளியிட்டுள்ளது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்