‘கைதி-2’ கார்த்திக்கு திருப்புமுனையைத் தரும்: லோகேஷ்

1 mins read
8621a615-c0c8-43d7-ad91-03d5f2b4fc61
கார்த்தி, லோகேஷ் கனகராஜ் - படம்: ஐஎம்டிபி

‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பரவலாகப் பேசப்படுகிறதே தவிர உருப்படியாக எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

இப்படத்தின் பூசை விரைவில் நடைபெறும் என அவ்வப்போது தகவல் வந்தாலும், உண்மை நிலவரம் அப்படி இல்லையாம்.

முதல் பாகம் வெளியான போதே ‘கைதி-2’ படத்தின் கதை, திரைக்கதை, தயாராகிவிட்டது, அதனால்தான் அதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபட்டது.

ரஜினியின் ‘கூலி’ படத்தை முடித்த கையோடு, ‘கைதி-2’ படத்தை லோகேஷ் இயக்குவார் என்றனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இப்போது ‘கைதி’ நாயகன் கார்த்தி, லோகேஷ் ஆகிய இருவருமே வெவ்வேறு பட வேலைகளில் மூழ்கிவிட்டனர்.

இந்நிலையில், ‘நிச்சயமாக ‘கைதி-2’ படத்தை இயக்குவேன். அது கண்டிப்பாக உங்களுக்குத் திருப்புமுனைப் படமாக அமையும்’ என கார்த்தியிடம் உறுதி அளித்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

குறிப்புச் சொற்கள்