வாய்ப்பைப் பறித்த காஜல், வருத்தப்படாத நயன்தாரா

வாய்ப்பைப் பறித்த காஜல், வருத்தப்படாத நயன்தாரா

1 mins read
4e76b372-bd99-468d-883b-0bf74bd5aedd
காஜல் (இடது), நயன்தாரா. - படங்கள்: கொய்மோய்

தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் மூன்று படங்களில் நடித்த நயன்தாரா, நான்காவது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, முன்பணமும் வாங்கியபின், திடீரென அந்தப் படத்திலிருந்து பின்வாங்கிவிட்டாராம். காரணம், காஜல் அகர்வால்.

நயன்தாரா கேட்ட சம்பளத்தில் பாதிகூட வேண்டாம், பத்து விழுக்காடு தந்தால் போதும் என்று தயாரிப்பாளரிடம் கூறிய அவர், எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் தருகிறேன் என்று இயக்குநரிடம் தெரிவித்ததாக் தகவல் வெளிவந்துள்ளது.

தொடக்கத்தில் பாலகிருஷ்ணாவைப் புகழ்ந்து, இறுதியில் நயன்தாராவுக்கு முன்பணம்கூட கொடுக்கவிடாமல் வாய்ப்பைத் தடுத்துவிட்டதாகத் தெலுங்கு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஆனாலும், நயன்தாராவுக்கு அதில் எந்த வருத்தமும் இல்லையாம். காரணம், அந்த கால்ஷீட்டைத் தன் கணவருக்குக் கொடுத்து, யாரை வேண்டுமானாலும் நாயகனாக அடுத்த படத்துக்கான வேலையைத் தொடங்கச் சொல்லிவிட்டதாகக் கூறிவிட்டாராம் நயன்.

அநேகமாக, விக்னேஷ் சிவனேகூட தன் மனைவிக்கு நாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்