‘சிக்கந்தர்’ படத்திற்கு பிறகு தெலுங்கில் ‘கண்ணப்பா’ என்ற படத்தில் நடித்த காஜல் அகர்வால், தற்போது இந்தியில் ‘தி இந்தியா ஸ்டோரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘ராமாயணா பாகம் 1’ படத்தில் இணைந்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ராமர் வேடத்தில் ரன்வீர் கபூரும் சீதை வேடத்தில் சாய்பல்லவியும் நடிக்கும் நிலையில், ராவணனாக ‘கேஜிஎப்’ நாயகன் யஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்க தற்போது காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார்.
முதலில் வேறொரு நாயகி நடிப்பதாக இருந்தது. பாலிவுட்டைத் தொடர்ந்து தென்னிந்திய திரையுலகிலும் காஜல் அகர்வாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அவரையே இந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.
ஏப்ரல் மாதம் படப்பிடிப்பில் யஷ் கலந்துகொண்டார். விரைவில் காஜல் அகர்வாலும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த ‘ராமாயணா’ படம் 2026ஆம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.