கலைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்குத் தமிழக அரசின் உயரிய விருதான ‘கலைமாமணி’ விருது வழங்கப்படுகிறது
அக்டோபர் 11ஆம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கில் 2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான அவ்விருது வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது.
இதில் நடிகர் மணிகண்டனும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் விருது பெற்றனர்.
அதைப் பெற்றவுடன் இருவரும் தேநீர்க்கடையில் சந்தித்துப் பேசுவது போன்ற காட்சி ஒன்றைப் பதிவுசெய்து தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டனர்.
அந்தப் பதிவில், “நாம் ஒரே கனவின் விதைகளை இரு வெவ்வேறு இடங்களில் விதைத்தோம். ஒரே இடத்தில் தொடங்கினாலும், வெவ்வேறு பாதைகளில் நடந்தோம். நாம் வேரூன்றி, நீண்ட தூரம் வந்து சேர்ந்திருக்கிறோம். விருது வழங்கிய மேடையில் வெற்றியின் வெளிச்சத்தில் கலைமாமணியைப் பகிர்ந்து நிற்கிறோம். நம் பயணங்கள் வேறாயினும் இலக்கு ஒன்றுதான்,” என அவ்விருவரும் கூறினர்.
மேலும், “நட்பு தூரத்தாலும் துன்பங்களாலும் தொலையாது என்பதைக் காலம் நினைவூட்டுகிறது,”என்றும் அதில் தெரிவித்தனர்.

