இந்தியத் திரையுலகில் ‘சூப்பர் நாயகன்’ தொடர்பான கதைகளைக் கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கை குறைவுதான்.
மேலும், அத்தகைய படங்களில் பெரும்பாலும் முன்னணி நடிகர்கள்தான் கதை நாயகர்களாக நடித்திருப்பார்கள்.
நடிகைகளுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைப்பது அரிதுதான். அந்த வகையில், இளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் அதிர்ஷ்டசாலி எனலாம்.
இவர் ‘லோகா சாப்டர் 1; சந்திரா’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் ‘சூப்பர் நாயகி’ வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான் தயாரிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. டோமினிக் அருண் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியாகி உள்ளது. அதில், ‘சூப்பர் நாயகி’ உடையுடன் கல்யாணி பிரியதர்ஷன் மிரட்டலாகக் காணப்படுகிறார்.
தற்போது சமூக ஊடகங்களில் இச்சுவரொட்டியைப் பலரும் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.


