சிம்புவின் ‘மாநாடு’ பட நாயகி கல்யாணி பிரியதர்ஷன், அதன் பின்னர் மலையாளத்தில் நடிப்பதிலேயே கவனம் செலுத்திவந்தார்.
சிறு இடைவெளிக்குப் பின், தமிழில் ரவி மோகனின் ‘ஜீனி’ படத்தில் நடிக்க வந்தவர், இப்போது கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
இதனிடையே, கமல்ஹாசனின் 237வது படத்தில் கல்யாணிக்கு முக்கியமான வேடம் தரப்பட்டுள்ளதாம். இரட்டை இயக்குநர்களான அன்பறிவ் சகோதரர்கள் இப்படத்தை இயக்கவுள்ளனர். கமலின் சொந்தப்படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.
“திடீரென இவ்வளவு பெரிய வாய்ப்பு தேடிவரும் எனக் கனவிலும்கூட நினைக்கவில்லை. மிக உற்சாகமாக உணர்கிறேன். படம் குறித்தும் எனது கதாபாத்திரம் பற்றியும் இப்போது எதுவும் சொல்ல இயலாது,” என்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.