ரன்வீர் சிங்குடன் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்

1 mins read
a0e64338-baad-4837-a0de-d6e81be8821d
கல்யாணி பிரியதர்ஷன், ரன்வீர் சிங் இணைந்து நடிக்கும் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது - படங்கள்: இந்து தமிழ் திசை

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாகக் கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரன்வீர் சிங் நடிப்பில் அண்மையில் வெளியாகியுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் ரூ.1,000 கோடி வசூலைத் தாண்டி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இன்னும் பல்வேறு திரையரங்குகளில் ‘துரந்தர்’ திரையிடப்பட்டு வருகிறது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ரன்வீர் சிங் ‘டான் 3’ படத்திலிருந்து விலகிவிட்டார். அதற்குப் பதிலாக ஜெய் மேத்தா இயக்கவுள்ள ‘ப்ரளய்’ படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

இப்படம் ‘ஜாம்பி’ கதைக்களத்தைப் பின்னணியாகக் கொண்ட படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகும் கதையாகும்.

இந்நிலையில், ‘ப்ரளய்’ படத்தின் நாயகியாகக் கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘லோகா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு இந்த இந்திப் படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இப்படத்திலும் அவருக்கு சண்டைக் காட்சிகள் இருக்கிறது என்கிறது படக்குழு.

ஏப்ரல் மாதத்திலிருந்து படப்பிடிப்பைத் தொடங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக நாயகன்– நாயகி இருவருமே சண்டைக் காட்சிகளுக்கான பயிற்சியில் ஈடுபடவிருக்கிறார்கள்.

‘ப்ரளய்’ படம் 2027ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ரன்வீர் சிங், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் நடிக்கும் இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதிரைப்படம்சினிமா