இளவட்டங்களைக் கூட்டுசேர்க்க கமல் திட்டம்

1 mins read
3d538625-d6a9-4385-bed1-183788ea0ae2
கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ். - படம்: ஊடகம்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கமல் நடித்த விக்ரம் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 70 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அப்படம், 450 கோடி ரூபாய் வசூலித்தது. அதன்பிறகு, கமல் நடிப்பில் வெளியான ‘இந்தியன்-2’ படம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், தற்போது தனக்காக மீண்டும் ஒரு கதையைத் தயார் செய்யுமாறு இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கமல்ஹாசன் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட இளவட்ட நடிகர்கள் நடித்ததுபோன்று, இரண்டு இளவட்ட நடிகர்களை அப்படத்தில் தன்னுடன் கூட்டணி சேர்த்துக் கொள்ள கமல் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்