மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு உருவான திரைப்படம் ‘தக் லைப்’. இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கெனவே இந்தப் படத்தில் கமல், சிம்பு அப்பா, மகன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது கிடைத்த புதிய தகவலின்படி இதில் கமல், சிம்பு இருவரும் நேருக்கு நேர் சட்டையை பிடித்து சண்டை போடுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா ‘வேட்டை நாய்’ என்ற நாவலைத் திரைப்படமாக உருவாக்க இருக்கிறார். அந்தப் படத்தில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். தற்போது மூன்று படங்களில் அடுத்தடுத்து நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கும் சிம்பு, அந்தப் படங்களை முடித்துவிட்டு சுதா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.