நடிகர் கமல்ஹாசன் அடுத்து சண்டைப் பயிற்சியாளர் அன்பறிவு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 237வது படமாகும்.
இந்தப் படத்தில் ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளாராம் கமல். இதற்காக அவர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார்.
“திரைத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து இந்திய சினிமா ரசிகர்களுக்கு புதுப்புது அனுபவங்களை அளிப்பதில் கமல்ஹாசனுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. தற்போது அமெரிக்கா சென்றுள்ள அவர் அங்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான நுணுக்கங்களை கற்று வருகிறார்.
“எனவே அவரது புதிய படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புது அனுபவத்தை தரும்,” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.’