தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அஜித் பாணியில் கமல் எடுத்த முடிவு

1 mins read
4654cdd6-8826-44a4-8cbc-1e72696d2817
கமல்ஹாசன். - படம்: ஊடகம்

அஜித் தன்னை ‘தல’ என்று அழைக்கவேண்டாம் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டதைப் போல தற்பொழுது கமல்ஹாசனும் தன்னை ‘உலக நாயகன்’ என்று அழைக்கவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் அஜித்குமாரை அவரது ரசிகர்கள் ‘தல’ எனக் குறிப்பிட்டு கொண்டாடி வரும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தன்னை ‘தல’ என அழைக்கவேண்டாம் என ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். அஜித், அஜித்குமார் அல்லது தனது பெயரின் சுருக்கமான ‘ஏகே’ என்று அழைத்தால் போதும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ரசிகர்கள் தங்களுக்குச் சூட்டும் அடைமொழியை மற்ற நடிகர்கள் பெருமையாகக் கருதும் நிலையில், அஜித்தின் இந்த முடிவு அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனும் இதே பாணியை தற்போது கையில் எடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். இதனால் மகிழ்ந்திருக்கிறேன், நெகிழ்ந்திருக்கிறேன்.

“நிறைய யோசனைக்குப் பிறகு மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் துறப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். எனவே, ரசிகர்கள், ஊடக நண்பர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், மநீம கட்சித் தொண்டர்கள், சக இந்தியர்கள் உட்பட அனைவரும் என்னை கமல்ஹாசன் என்றோ, கமல் என்றோ, ‘கே ஹெச்’ என்றோ குறிப்பிட்டால் போதுமானது என கேட்டுக்கொள்கிறேன்,” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாகமல்