கமலின் புதிய படம் தொடக்கம்

கமலின் புதிய படம் தொடக்கம்

1 mins read
25aaa17f-5deb-4c88-ad79-c93bf41d433a
கமல்ஹாசன். - படம்: தி எக்கானமிக் டைம்ஸ்

ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்கு முன்பு, தனியே ஒரு படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்தார் கமல்ஹாசன்.

‘சித்தா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண்குமார், கடந்த வருடமே படத்தின் ஒரு வரிக் கதையைச் சொல்லி கமலிடம் சம்மதம் வாங்கிவிட்டதாகத் தெரிகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும், கமல் புதுப்படத்துக்கான வேலைகளை முழு வீச்சில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் விருமாண்டி பாணி கதைக்களத்துடன் உருவாகிறதாம். எனவே, ‘விருமாண்டி’யைப்போல் புதுப் படமும் வெற்றிபெறும் என்று எதிர்பார்ப்பதாக கமல் ரசிகர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்