ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் ஆடை குறித்து எழுந்த விவாதத்தில், நடிகை கிருத்தி சனோனுக்கு மீண்டும் கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாகக் கிருத்தி சனோன் அணிந்திருந்த நவீன ஆடை குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா விமர்சித்திருந்தார்.
அதற்குக் கிருத்தி சனோன், “பண்டிகைகளின் முக்கியத்துவம் ஆடையில் இல்லை, பாரம்பரிய உணர்வுகளில்தான் உள்ளது,” என்று காட்டமாகப் பதிலளித்தார்.
“பெண்களின் கலாசார மரியாதையைக் கழுத்துப் பகுதி ஆடையை வைத்து மதிப்பிட முடியாது,” என்றும் அவர் கூறினார்.
இதற்கு மீண்டும் பதிலளித்த கங்கனா ரணாவத், “அவர் என்ன ஆடை வேண்டுமானாலும் அணியலாம், அவரை யார் தடுத்தது?
“நவீன பெண்களுக்குப் பல ஆடைத் தேர்வுகள் இருந்தாலும், பாரம்பரிய நிகழ்ச்சிக்கு எது பொருத்தமான ஆடை என்ற கேள்வி எழுகிறது,” என்றார்.
இந்த ஆடை விவாதம் சமூக ஊடகங்களில் பெரிதாகப் பரவியதை அடுத்து, சம்பந்தப்பட்ட நகை நிறுவனம் அந்த விளம்பரத்தை உடனடியாக நீக்கிவிட்டது.


