ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ ஆகிய இரு திரைப்படங்களும் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளிவரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது ‘கங்குவா’வின் வெளியீடு அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்தால் ‘கங்குவா’ தீபாவளி வெளியீடாக இருக்கும்.
இரு படங்களும் ஒன்றாக வெளிவந்தால் ஒவ்வொன்றுக்கும் திரையரங்குகளை ஒதுக்கவேண்டியிருக்கும், வசூலிலும் பாதிப்பு ஏற்படக்கூடும். அத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்க ‘கங்குவா’ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இதுகுறித்து ‘கங்குவா’வைத் தயாரிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ‘வேட்டையன்’னைத் தயாரிக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணக்கம் கண்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து நவராத்திரி காலத்தில் ‘வேட்டையன்’னுக்கு எந்தப் போட்டியும் இருக்காது என்று நம்பப்படுகிறது.