தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கண்ணப்பா’ புகைப்படங்கள், தகவல்கள் கசிவு

1 mins read
d21ef3a0-f761-4866-a2ec-c82f2e39305f
பிரபாஸ். - படம்: ஊடகம்

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘கண்ணப்பா’.

முகேஷ் சிங் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருந்தனர்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக ரகசியம் காத்து வந்த நிலையில், இப்படத்தில் நாயகன் பிரபாசின் தோற்றம் குறித்து சில தகவல்களும் படங்களும் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவில், எட்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்தபின் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படம் தயாரிப்பில் இருப்பதாகவும் இப்படம் குறித்த புகைப்படங்களை யாரும் பகிர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், யார் மூலமாக புகைப்படங்கள் வெளியே கசிந்தன என்று தகவல் கொடுத்தால் ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கண்ணப்பா’ படத்தில் அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்