மிகப் பெரிய வெற்றிப் படமான ‘காந்தாரா சாப்டர் 1’ல் வில்லனாக நடித்த குல்ஷன் தேவய்யா, இப்போது தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
சமந்தா நடித்துத் தயாரிக்கும் ‘மா இன்டி பங்காரம்’ படத்தில் அவர் இணைந்துள்ளார். படப்பிடிப்பு அண்மையில் பூசையுடன் தொடங்கியது.
குல்ஷன் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் படத்தின் அறிவிப்பு பதிவைப் பகிர்ந்து, “நானும் இருக்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும், அவரது கதாபாத்திரம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
சமந்தாவின் ‘ஓ! பேபி’ படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இந்தப் படத்தையும் இயக்குகிறார். ‘மா இன்டி பங்காரம்’ பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குல்ஷன், இதற்கு முன்பு இந்தித் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ‘காந்தாரா சாப்டர் 1’தான் கன்னடத்தில் இவரின் முதல் படமாகும்.

