தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘இட்லி கடை’யை ஓரம் கட்டிய ‘காந்தாரா’

1 mins read
4754a340-dfe0-4772-ac7c-ab122095ffb2
‘காந்தாரா’ படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி, ‘இட்லி கடை’ படத்தில் நடித்த தனுஷ். - படம்: இந்திய ஊடகம்

‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியான முதல் சில நாள்களில் ‘இட்லி கடை’ திரைப்படத்தை விட அதிக வசூல் ஈட்டி, முன்னிலை வகித்து வருகிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியான நிலையில், ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் இந்திய அளவில் பெரும் வசூல் வேட்டையை நடத்தி வருவதாகவும் ‘இட்லி கடை’ படம் தமிழ்நாட்டில் நல்ல ஆரம்ப வசூல் ஈட்டியிருந்தாலும் அதன் வசூல் வேகம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ பான்-இந்தியா திரைப்படம். கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் அமோக வசூல் செய்து வருகிறது. படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.60 கோடிக்கும் அதிகமான வசூல் ஈட்டியுள்ளது. முதல் மூன்று நாள்களில் இந்தியாவில் பெரும் வசூலை அள்ளியதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை ஒட்டி நல்ல ஆரம்ப வசூலைப் பெற்றது. எனினும், ‘காந்தாரா’ அலையிலும் படத்தின் வசூல் வேகம் குறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களின்படி, தமிழ்நாட்டில் ‘இட்லி கடை’ படம் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை விட வசூலில் சிறப்பாக இருந்தாலும், ஒட்டுமொத்த இந்திய வசூலில் ‘காந்தாரா சாப்டர் 1’ முன்னிலை வகிக்கிறது. ‘இட்லி கடை’ படம் ஒரு கிராமத்து பாணியில் ரசிகர்களைக் கவர்ந்தாலும், ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் பான்-இந்தியா எதிர்பார்ப்புடன் வெளியாகி, அதற்கேற்ற வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதனுஷ்