நடிகர் ரவி மோகன் ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’, ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவற்றில், ‘ஜீனி’ படப்பிடிப்பு மொத்தமாக முடிவுற்று, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘கராத்தே பாபு’ படப்பிடிப்பும் முடியும் தறுவாயில் உள்ளது என ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள நேர்காணலில், “எனது திரையுலக வாழ்க்கையில் இப்போது நடித்து வரும் ‘கராத்தே பாபு’ படம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.
“அதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
“கிட்டத்தட்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டிவிட்டோம். இன்னும் ஒரு சில காட்சிகளை மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது.
“இப்படத்தின் முக்கியக் காட்சிகளுக்காக என் உடல் எடையை 12 கிலோவரை குறைப்பதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.
“அப்படத்தில் இருப்பது போன்று என்னை நானே பார்த்தது கிடையாது.
“புதிதாக ஒரு விஷயத்தை முயற்சி செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தில்தான் ‘கராத்தே பாபு’ படம் தயாராகி வருகிறது,” என்று கூறியுள்ளார்.

