கரீனா கபூர்: பள்ளிப் படிப்பை முடிக்காதது என்றும் ஆறாத வருத்தம்

கரீனா கபூர்: பள்ளிப் படிப்பை முடிக்காதது என்றும் ஆறாத வருத்தம்

1 mins read
a1ec0376-b49f-4cbf-b6f6-42391dc821e5
நடிகை கரீனா கபூர். - படம்: விகடன்

பாலிவுட் திரையுலகில் கூடுதல் கவனம் பெற்ற நடிகை கரீனா கபூர், தமது பள்ளிப் படிப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல ‘பாட்காஸ்டர்’ ஹனுமான் தாஸ் என்பவருக்கு அளித்த பேட்டியில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நல்ல வாய்ப்புகள் இருந்தபோதிலும், 11ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியதாக அவர் கூறினார்.

“படிப்பைப் பாதியில் கைவிட்டது என் வாழ்க்கையில் என்றும் ஆறாத ஒரு வருத்தமாகவே இருந்து வருகிறது,” என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

“நான் படிப்பை முடிக்காததைச் சிலர் கிண்டல் செய்யலாம்; என்ன வேண்டுமானாலும் பேசலாம்,” என்று குறிப்பிட்ட கரீனா, “ஆனால் ஒரு நடிகையாக என்னை நிரூபிக்க வேண்டும் என்பதே எனது அன்றைய லட்சியமாக இருந்தது,” என்றார்.

தாம் செய்த இந்தத் தவறைத் தனது மகன்களான தைமூர், ஜெஹ் ஆகியோர் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மகன்கள் இருவரும் தங்களது படிப்பை முழுமையாக முடித்த பிறகே, விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறினார்.

தனது சொந்த அனுபவமே யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து பெண் குழந்தைகளின் கல்விக்காகப் பணியாற்றத் தூண்டுகோலாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

பெண் கல்வி, பாலின சமத்துவத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கரீனா கபூர், 2014ஆம் ஆண்டு முதல் யுனிசெஃப்பில் இந்தியாவின் தூதராகச் செயல்பட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
நடிகையுனிசெஃப்குழந்தைகல்விதிரையுலகம்