நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் காவல் அதிகாரி வீரப்பனாக நடிக்க இருக்கும் செய்தியை அறிவித்து அவரின் படத்தையும் வெளியிட்டு உள்ளது படக்குழு.
கார்த்தி தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ‘ஹிட் 3’ படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்த கார்த்தி, அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஹிட் 4’ படத்தில் ஏஇபி வீரப்பனாக நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தை சைலேஷ் கோலானு இயக்க, நானி தயாரிக்க இருக்கிறார். அந்தப் படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடிக்க இருக்கும் கார்த்தியின் படத்தை அவரது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் படக்குழு வெளியிட்டுள்ளது.