முதன்முறையாக இயக்குநர் சுந்தர்.சியுடன் இணைகிறார் நடிகர் கார்த்தி.
தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் சுந்தர்.சி.
அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதை அடுத்து, அவரது இயக்கத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த கார்த்தியிடம், தான் உருவாக்கிய ஒரு கதையைச் சுருக்கமாக விவரித்தாராம் சுந்தர்.சி. இதையடுத்து, இருவரும் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளாராம் கார்த்தி.
‘மூக்குத்தி அம்மன்-2’ பட வெளியீட்டுக்கு முன்பு இருவரும் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இருவரும் கூட்டணி அமைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதை அனைத்துவிதமான வணிக அம்சங்களும் கொண்ட படமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளாராம் சுந்தர்.சி.
குறிப்பாக கார்த்தியின் நகைச்சுவை உணர்வுக்கு ஏற்ப காட்சிகள் அமைக்கப்படும் என்றும் சண்டைக் காட்சிகளும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

