ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அவர் மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் என்பதுதான் அத்தகவல்.
பல மாதங்களுக்கு முன்பே ரஜினியை நேரில் சந்தித்து தன்வசம் இருந்த கதையை விவரித்தாராம் கார்த்திக் சுப்பராஜ்.
அது ரஜினிக்குப் பிடித்துவிட்டதாகவும் விரைவில் படத்திற்கான வேலை தொடங்குவோம் என அவர் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் ஏற்கெனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டில் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார்.
அநேகமாக, இப்படத்தின் இரண்டாம் பாகம்தான் அடுத்து உருவாகும் என ரஜினி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
‘வேட்டையன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்துள்ள ரஜினி, அடுத்து நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார்.