இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இறுதியாக இயக்கிய ‘ரெட்ரோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது, அடுத்த படத்திற்கான வேலைகளைத் துவங்கியுள்ளார். இது கார்த்திக் சுப்புராஜின் 10ஆவது படம். இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
ஆஸ்கர் விருதுபெற்ற ‘எலிஃபெண்ட் விஸ்பரர்’ ஆவணப்படம் மற்றும் ‘சூரரைப்போற்று’ படங்களைத் தயாரித்த சிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் திங்கட்கிழமை (நவம்பர் 10) துவங்கியுள்ளது. இதன், தொழில்நுட்பக் குழு மற்றும் நடிகர்கள் குழு பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

