ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீடு மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
‘கருப்பு’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சுவாசிகா, ஷிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் ‘சாட்டிலைட்’ உரிமையை ஜீ தொலைக்காட்சி மிகப்பெரிய தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. அதனைத்தொடர்ந்து, இப்படத்தின் டிஜிட்டல் உரிமைக்காகத் தயாரிப்பு நிறுவனம் ‘நெட்ஃபிளிக்ஸ்’, ‘ஓடிடி’ தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முன்னதாக, இப்படத்தை 2026 ஜனவரி 23ஆம் தேதி திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது, ‘கருப்பு’ படத்தை 2026 மார்ச் 19ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

