‘கருப்பு’ படத்தின் குறு முன்னோட்டக் காட்சித்தொகுப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளையொட்டி ‘டீசர்’ வெளியானது.
‘ரெட்ரோ’ படத்திற்குப் பிறகு, சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் ‘கருப்பு’. இது சூர்யா நடிப்பில் வெளியாகும் 45வது படம். திரிஷா நாயகியாக நடிக்க, ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார்.
மேலும், சுவாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு, நட்டி நட்ராஜ், அனகா ரவி எனப் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் சாய் அபயங்கர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.
குறு முன்னோட்டக் காட்சித்தொகுப்பில் சண்டைக் காட்சிகள் அதிகம் காணப்படுகின்றன. சரவணன் என்ற தனது நிஜப் பெயரில் நடித்துள்ளார் சூர்யா. ‘எனக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது’ என்ற வசனத்தைப் பேசுவதன் மூலம், சூர்யா இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது.
எனினும் ஒரு காட்சியில்கூட திரிஷாவைக் காணவில்லை.