கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘லாலாகுண்டா பொம்மைகள்’

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘லாலாகுண்டா பொம்மைகள்’

1 mins read
9abb4d17-29e4-416f-855d-27e4b459e3e9
‘லாலாகுண்டா பொம்மைகள்’ படக் காட்சி. - படம்: ஊடகம்

அறிமுக இயக்குநருடன் கைகோத்துள்ளார் நடிகர் கௌதம் கார்த்திக்.

இயக்குநர் ராஜ் முருகனிடம் ‘ஜிப்சி’, ‘ஜப்பான்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வீணா ராகவன்.

இவர் அறிமுகமாகும் படத்தில்தான் கௌதம் கார்த்திக் நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார்.

படத்துக்கு ‘லாலாகுண்டா பொம்மைகள்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். இது தென் சென்னை மக்களின் வாழ்க்கையை, அவர்களை மையப்படுத்தி நடக்கும் அரசியலை விவரிக்கும் படைப்பாக இருக்கும்.

“நான் சிறு வயது முதல் பார்த்த பல்வேறு சம்பவங்களை விவரிக்க உள்ளேன். படம் பார்க்கும் ரசிகர்களால் இந்த கதையுடன் தங்களை எளிதில் பொருத்திக்கொள்ள இயலும்.

“மேலும் படம் பார்த்த பின்னர் அவர்களால் அரசியலை மேலும் நன்றாக புரிந்துகொள்ள இயலும்,” என்கிறார் வீணா ராகவன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்