முதன்முறையாக கவினுடன் இணைந்து நடிக்கவுள்ளார் பிரியங்கா மோகன்.
தற்போது பவன் கல்யாணின் ‘ஓஜி’ தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா.
இதுவரை சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ், ரவி மோகன் என முன்னணி நாயகர்களுடன் மட்டுமே இணைந்து நடித்து வந்த பிரியங்கா, தற்போது கவினுக்கு ஜோடியாக தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
திடீரென அவர் இவ்வாறு கீழிறங்கி வரக் காரணம் தெரியாமல், திரையுலகத்தினர் வியக்கிறார்கள்.
ஒருவேளை அதிக சம்பளம் கிடைத்திருக்கலாம், அல்லது, படத்தின் கதை மனதை வெகுவாகக் கவர்ந்திருக்கக்கூடும் என்கிறார்கள் கோடம்பாக்க விவரப் புள்ளிகள்.
இந்தப் படம் தொடர்பான மேல் விவரங்கள் விரைவில் வெளியாகலாம்