தமிழ்த் திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவர் கவின். அவருடைய கைவசம் தற்போது ‘மாஸ்க்’, ‘ஹாய்’ ஆகிய படங்கள் இருக்கின்றன.
அடுத்ததாக, ‘தண்டட்டி’ படத்தை இயக்கிய ராம் சங்கையா இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார்.
அப்படத்தை ‘லப்பர் பந்து’, ‘சர்தார்’ போன்ற படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்குமுன் வெளியானது.
அப்படத்தின் முதற்கட்ட தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்களிடம் விசாரித்தபோது, நாயகி கிடைக்காமல் அப்படக்குழு தவித்து வருவதாகத் தெரிவித்தனர்.
அப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்புலத்தில் உருவாகும் படம் என்பதால் பெரும்பாலான இளம் நாயகிகள் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதனால், பொருத்தமான நாயகியை அப்படக்குழுவினர் தேடிவருகின்றனர்.

