பிரபாஸ் படத்தில் ‘கயல்’ ஆனந்தி

1 mins read
04db439c-1dbd-4bce-8433-0adcf4f25d37
‘கயல்’ ஆனந்தி. - படம்: ஊடகம்

நடிகை ‘கயல்’ ஆனந்தி திருமணத்துக்குப் பிறகும் நல்ல படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில், மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ என்ற படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் என மூன்று கதாநாயகிகள் உள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 9ஆம் தேதியன்று இப்படம் திரைகாண உள்ளது.

இந்நிலையில், கதைப்படி நாயகன் பிரபாசுக்கு நெருக்கமான ஒரு கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு ஊடகங்கள் இது குறித்து பல்வேறு செய்திகளை வெளியிட்டபோதும், படக்குழுவின் தரப்பிலோ கயல் ஆனந்தி தரப்பிலோ இதுவரை இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.

எனினும், இந்தப் பட வாய்ப்பு எதிர்பாராத வகையில் அமைந்தது என்றும் இப்படம் வெளியான பிறகு தம்மால் திரையுலகில் அடுத்து ஒரு சுற்றை வெற்றிகரமாக வலம்வர முடியும் என்றும் நெருக்கமானவர்களிடம் சொல்லி மகிழ்ச்சியில் மலர்ந்து போகிறாராம் ‘கயல்’ ஆனந்தி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்