கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பணப் பிரச்சினைதான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.
இந்நிலையில், அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம் கீர்த்தி.
டிரம் ஸ்டிக் நிறுவனம் தயாரிக்கும் இப்படமும் நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையுடன் உருவாகிறதாம். தயாரிப்பு முன்பணிகள் தொடங்கியுள்ளன.
மிஷ்கின் ஏற்கெனவே இயக்கி முடித்துள்ள ‘டிரெய்ன்’, ‘பிசாசு’ ஆகிய இரு படங்களும் சில பிரச்சினைகள் காரணமாக இன்னும் வெளியாகாமல் முடங்கி உள்ளன. இந்நிலையில், அவரும் கீர்த்தியும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

