தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் தந்தையுடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி பாண்டியன்

1 mins read
98fbe5a7-0f03-4093-b9fe-cf17b0dc85c6
தந்தை அருண் பாண்டியனுடன் கீர்த்தி பாண்டியன். - படம்: ஊடகம்

‘அஃகேனம்’ என்ற படத்தில் தந்தை அருண் பாண்டியனுடன் ‘அன்பிற்கினியாள்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.

இயக்குநர் உதய் கே இயக்கத்தில் ‘அஃகேனம்’ என்ற படம் உருவாகியுள்ளது. இதில் பிரவீண் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைக்கிறார். ஏ அண்ட் பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் அருண் பாண்டியன் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் உதய் கூறும்போது, “அஃகேனம்’ என்பது தமிழில் ஆயுத எழுத்தை குறிக்கும். படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

“இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகம், பாண்டிச்சேரி தவிர்த்து வட இந்தியாவிலுள்ள சில முக்கியமான பகுதிகளிலும் எடுக்கப்பட்டன. இப்படத்தின் பின்னணி இசை அனைத்துலக தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரபலமான இசை அரங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்தத் திரைப்படத்தில் தேசிய அளவில் விருது பெற்ற ஓடிஸி நடன மேதை கங்காதர் நாயக், அவரது குழுவினருடன் ஏராளமான வட இந்திய நாட்டிய கலைஞர்களும் இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் நடனமாடி இருக்கிறார்கள். ‘அஃகேனம்’ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும்,’’ என்றார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை