நடிகை கீர்த்தி சுரேஷ், தனது பள்ளி நண்பர் ஆண்டனியைக் காதலித்து வந்ததாக அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இவர்களது திருமணம் நேற்று (டிசம்பர் 12ஆம் தேதி) கோவாவில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எனப் பல பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

