தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சியில் இறங்கிய கீர்த்தி சுரே‌‌ஷ்

1 mins read
658e29b0-5a1a-471f-9d99-1df2914e572f
கவர்ச்சியான உடைகளில் கீர்த்தி சுரே‌‌ஷ். - படம்: ஊடகம்

திருமணத்திற்குப் பிறகு நடிகை கீர்த்தி சுரே‌‌ஷ் தன் கணவருடன் பல இரவு விழாக்களில் கவர்ச்சியான உடைகளில் கலந்துகொண்டு வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது காதலர் ஆண்டனியைத் திருமணம் செய்துகொண்டார். 12 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களுடைய திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடந்தது. கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்திற்குப் பின் கணவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் திருமணத்திற்குப் பின் கணவருடன் கலந்துகொண்ட இரவு விருந்துகளில் கவர்ச்சியாக உடையணிந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

அதில் கவர்ச்சியான உடையில், கணவர் மற்றும் நண்பர்களுடன் நடனம் ஆடும் படங்களும் இருக்கின்றன. திருமணத்துக்கு முன்பு வரை குடும்பப்பாங்காக இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், பாலிவுட் படத்தில் நடித்துவிட்டு, திருமணமும் செய்த பிறகு படு கவர்ச்சியான உடைகளை அணியத் தொடங்கியிருப்பது கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை