திருமணத்தை உறுதிசெய்த கீர்த்தி

1 mins read
d62c2068-9c3a-46a5-a594-ef5c7feb094e
கீர்த்தி சுரேஷுடன் ஆண்டனி தட்டில். - படம்: ஊடகம்

காதலர் ஆண்டனி தட்டிலுடன் அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாக கீர்த்தி சுரேஷ் அறிவித்தார்.

கீர்த்தியின் திருமணத்தை அவரது அப்பாவும் உறுதி செய்த நிலையில் நேற்றைய தினம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ், தன்னுடைய திருமணம் குறித்து பேசியுள்ளார்.

தன்னுடைய பெற்றோருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த மாதம் தன்னுடைய படம் வெளியாகவுள்ளதாகவும் மேலும் தன்னுடைய திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாகவும் அதற்காகவே திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பல தொழில்களைச் செய்து வரும் ஆண்டனி தட்டில் கீர்த்தி சுரேஷை மணக்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்