சாய் பல்லவி கதாநாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்ட புதுப்படத்தில் இருந்து, திடீரென அவரை மாற்றிவிட்டு கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு இயக்குநர் வேணு யெல்டாண்டி இயக்கத்தில் உருவாகும் படம் ‘எல்லம்மா’.
இதில் நடிகர் நானி நாயகனாகவும் சாய் பல்லவி நாயகியாகவும் நடிப்பதாகக் தகவல் வெளியானது. ஆனால், இடையே என்ன நடந்தது எனத் தெரியவில்லை.
தற்போது நானிக்குப் பதிலாக நிதின் நடிப்பார் எனப் படக்குழு கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாய் பல்லவிக்குப் பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மொத்தம் ரூ.40 கோடி செலவில் உருவாகும் இப்படத்தை, தில் ராஜு தயாரிக்க உள்ளார். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
வழக்கமாக ஒரு கதாநாயகி இவ்வாறு மாற்றப்பட்டால் அவர் தனக்குப் பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நாயகியுடன் சண்டையிட்டதாகத் தகவல் வெளியாகும்.
ஆனால், தன்னைப் பற்றி பொய்யான தகவலை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சாய் பல்லவி எச்சரிக்கை விடுத்திருப்பதால் தெலுங்கு ஊடகங்கள் இவ்விவகாரத்தில் அடக்கி வாசிக்கின்றனவாம்.

