படக்குழுவினர் 130 பேருக்கும் பத்து கிராம் தங்க நாணயம் பரிசளித்த நடிகை

படக்குழுவினர் 130 பேருக்கும் பத்து கிராம் தங்க நாணயம் பரிசளித்த நடிகை

1 mins read
3f04ec18-07c7-4806-b9be-a4f7a197757e
-

நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வருகிறது தெலுங்குப் படமான 'தசரா'.

இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் படக்குழுவினர் 130 பேருக்கும் பத்து கிராம் தங்க நாணயத்தை அன்பளிப்பாக வழங்கினாராம் கீர்த்தி.

இதற்காக அவர் 70 - 75 லட்ச ரூபாய் செலவிட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

"கடைசி நாள் படப்பிடிப்பன்று கீர்ச்சி மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார்," என்று 'தசரா' படக்குழு வட்டாரம் தெரிவித்தது.

அப்படத்தில் தம்முடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த உதவிய படக்குழுவினருக்கு கீர்த்தி பரிசளிக்க விரும்பியதாகக் கூறப்பட்டது. படத்தில் 'வெண்ணிலா' என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. இம்மாதம் 39ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 'தசரா' படம் வெளியாகவிருக்கிறது.