விலகிய கீர்த்தி சுரேஷ், இணைந்த பாக்யஸ்ரீ

விலகிய கீர்த்தி சுரேஷ், இணைந்த பாக்யஸ்ரீ

1 mins read
0001c4a6-d4cf-4b57-94ae-c31b0182d6fb
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (இடது), பாக்யஸ்ரீ போர்ஸ் (வலது). - படங்கள்: இந்து தமிழ் திசை

25 ஆண்டுகளாகத் தமது இசையால் இந்தியத் திரையுலகை ஆட்டிப்படைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத். அவர் தற்போது ‘எல்லம்மா’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

வேணு எல்டண்டாடி இயக்கத்தில் தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் அப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

அப்படத்தில் பார்சி என்ற கதாபாத்திரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் அப்படம் உருவாகி வருகிறது.

அப்படத்தில் நாயகியாக முதலில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவர் தற்போது அதிலிருந்து விலகியுள்ளார்.

முதலில் ஒரு முன்னணி இளம் நடிகர் அப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகன் என முடிவானதும், அந்த ஜோடி ரசிகர்களைப் பெரிதும் ஈர்க்காது என எண்ணிய கீர்த்தி சுரேஷ், கண்ணியமாகப் படத்திலிருந்து விலகிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்,அவருக்குப் பதிலாக சாய் பல்லவி உள்பட பல நடிகைகளிடம் பேசி வந்தனர். தற்போது பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க இருக்கிறார்.

‘காந்தா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்