திரைக்கு வரத் தயாராகும் கீர்த்தி சுரேஷின் படங்கள்

திரைக்கு வரத் தயாராகும் கீர்த்தி சுரேஷின் படங்கள்

படம்: அவுட்லுக் பிசினஸ்

03 Oct 2026 - 4:35 pm

1 mins read

திருமணத்திற்குப் பிறகும் திரைத்துறையில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட ‘டோரதி’ திரைப்படம், ரொரோண்டோ அனைத்துலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும், நானி நடிப்பில் வெளியான ‘தி பாரடைஸ்’ படத்தில் இவர் ஆடிய ‘யேஷா நகுல’ என்ற சிறப்புப் பாடல், இணையத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பிரபலம் அடைந்துள்ளது.

தற்போது, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘ரவுடி ஜனார்தனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. இதன் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனுடன், அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கும் ‘ஜனவரி 12 விடுதலை’ படத்திலும் கீர்த்தி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

அவர் தமிழில் மிஷ்கினுடன் இணைந்து நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரைகாண உள்ளது.

இதுதவிர, இந்தியில் ‘ரப்தார்’, மலையாளத்தில் ‘தோட்டம்’ உள்ளிட்ட படங்களிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்