நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, தன்னுடைய தந்தையே தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஊடகத் தளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், "என் தந்தை என் அம்மாவை அடிப்பார். ஆணோ, பெண்ணோ, ஒரு குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதால் அந்த தாக்கம் அக்குழந்தையை வாழ்க்கை முழுவதும் அச்சமூட்டும்.
"மனைவியை அடிப்பது, பெண் குழந்தைகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்றவற்றையெல்லாம் ஆண்கள் சிலர் பிறப்புரிமையாக நினைத்திருக்கலாம்.
"நான் என்னுடைய 8 வயதில் என் தந்தையால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அவருக்கு எதிராக பேச எனக்கு 15 வயதில்தான் தைரியம் வந்தது.
"ஆனால் இதையெல்லாம் சொன்னால் என் அம்மா நம்புவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால் எது நடந்தாலும் கணவனவே கண்கண்ட தெய்வம் என்ற மனநிலையில்தான் என் அம்மா இருந்தார்.
"ஆனால் நான் அவருக்கு எதிராகப் போராடினேன். எனக்கு 16 வயதுகூட ஆகவில்லை, எங்களைவிட்டு அவர் சென்றுவிட்டார். அடுத்த வேளை உணவு எங்கிருந்து வருமென்று எங்களுக்கு அப்போது தெரியவில்லை," என்று விவரித்தார்.

