தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேன் திரைப்படவிழாவில் காஞ்சிபுரம் சேலை கட்டிவந்த கு‌ஷ்பூ

1 mins read
742db8b1-e9a5-4af5-99f7-38722e9f81ce
படம்: டுவிட்டர் -

உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் பிரான்சின் கேன் திரைப்பட விழாவும் ஒன்று.

அதில் உலகின் பல முன்னணி நடிகர்கள், கலைஞர்கள் கலந்துகொள்வார்கள்.

இவ்வாண்டிற்கான திரைப்படவிழாவில் இந்திய திரைப்பட நடிகையும் அரசியல்வாதியுமான கு‌ஷ்பூ சுந்தரும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கு‌ஷ்பூ காஞ்சிபுரம் சேலைக் கட்டி வந்தார்.

அது குறித்த படங்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

கையால் நெசவு செய்யப்பட்ட சேலைகளை வாங்குவது சேலை உற்பத்தி செய்யும் கலைஞர்களுக்கும் கலைக்கும் செய்யும் உதவி என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேன் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் கலந்துகொண்டது பெருமைதருவதாகவும் அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் எல் முருகன் தலைமையிலான அணி இந்தியாவை பிரதிநிதித்து கேன் திரைப்பட விழாவில் கலந்துகொண்டது.

இந்திய நடிகை சாரா அலி கான், ஐஸ்வர்யா ராய் போன்றோரும் அவ்விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.