தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டு நாள்களில் ரூ.53 கோடி வசூலித்த ‘கிங்டம்’

1 mins read
feb314b3-054f-4884-b8c6-2d5ef114a098
கிங்டம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. - கோப்புப் படம்: ஊடகம்

‘கிங்டம்‘ திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ. 53 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கிங்டம் படம் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கவுதம் தின்னனூர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கவுதம் தின்னனூர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு தெலுங்கில் வெளியான ஜெர்சி என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார்.

‘ஆக்‌ஷன் திரில்லர்’ கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ‘கிங்டம்’ படம் 2 நாட்களில் ரூ.53 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

காவல்துறை அதிகாரியாக இருக்கும் சூரி (விஜய் தேவரகொண்டா) சிறு வயதில் வீட்டிலிருந்து ஓடிப் போன தனது அண்ணன் சிவாவை ( சத்யதேவ்) தேடிச் செல்கிறார்.

அவரது அண்ணன் இலங்கையில் பழங்குடியினரின் தீவில் வாழ்ந்து வருகிறார். அந்த தீவில் சூரி ஒரு அண்டர்கவர் ஆபரேஷனுக்கு செல்ல தயாராகிறார். அந்த தீவில் உள்ளவர்களை வைத்து நடைபெறும் கடத்தல் தொழிலை எப்படி ஒழிக்கிறார், தன் அண்ணனைக் கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் படத்தின் சாராம்சம்.

குறிப்புச் சொற்கள்