கன்னத்தில் முத்தமிட்டார்

2 mins read
ade6dfaf-c52d-42d7-8df4-a4f6bbf8de39
மிஷ்கின் கன்னத்தில் நித்யா மேனன் முத்தம். - படம்: ஊடகம்

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில், நித்யாமேனன், கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, மிஷ்கின், அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் என பலரும் கலந்துகொண்டார்கள்.

விழாவிற்கு வந்த மிஷ்கினைப் பார்த்து நித்யா மேனன் இன்ப அதிர்ச்சியடைந்து அவரது கன்னத்தில் அன்பாக முத்தம் கொடுத்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

விழாவிற்கு வருகை தந்தவுடன் மிஷ்கினைப் பார்த்து நித்யா மேனன் ஆச்சரியத்தில் கத்தினார். உடனே மிஷ்கின் நித்தியா மேனனின் கைகளைப் பிடித்து நலம் விசாரிக்க முயற்சி செய்தார்.

உடனடியாக நித்யா மேனன் தயவு செய்து என்னை தொடாதீங்க தொடாதீங்க எனக் கூறினார். உடனடியாக மிஷ்கின் கன்னத்தை காண்பித்தார். பிறகு நித்யா மேனன் அவருக்கு பாசமாக முத்தம் கொடுத்தார். பின் நித்யா மேனன் கையைப் பிடித்து மிஷ்கினும் பதிலுக்கு அன்பாக முத்தம் கொடுத்தார்.

மிஷ்கினும் நித்யா மேனனும் இணைந்து ‘சைக்கோ’ படத்தில் பணியாற்றியுள்ளனர். சினிமாவையும் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்றுகூட சொல்லலாம். குறிப்பாக, மிஷ்கின் இயக்கும் படங்கள் வெளியாகவில்லை என்றால் ‘சீக்கிரம் படம் செய்’ என நித்யா மேனன் கூறுவதும் நித்யா மேனன் படங்கள் வெளியானால் அதனைப் பார்த்துவிட்டு அவரை அழைத்து மிஷ்கின் பாராட்டுவதும் வழக்கம் என்று திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தரமான படங்களை இயக்கிய மிஷ்கின், நித்யா மேனன் நடிப்பு அரக்கி என பல பேட்டிகளில் புகழ்ந்து பேசியுள்ளார். திரைத்துறையையும் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் அன்பாக முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்