தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நட்பு பாராட்டும் கோடம்பாக்க இளையர்கள்

1 mins read
e26c22a3-5dbd-4472-b65a-5e043b837f64
துருவ் விக்ரம். - படம்: ஊடகம்
multi-img1 of 2

தமிழ்த் திரையுலகில் எப்போதுமே போட்டிக்குப் பஞ்சமிருக்காது. எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய், சிம்பு-தனுஷ் என்கிற போட்டியெல்லாம் இனிமேல் நீடிக்காது போலிருக்கிறது.

ஏனெனில், இப்போதுள்ள இளம் இயக்குநர்கள் உட்பட திரைத்துறையின் இளையர்களிடையே ஒற்றுமையும் நட்பும் மிளிர்கிறது. இது, அவர்களுடைய தொழிலுக்கு மிகவும் கைகொடுக்கிறது என்பதுதான், கவனிக்கப்பட வேண்டிய நல்ல அம்சம்.

ரஹ்மானின் மகன் அமீன், விக்ரமின் மகன் துருவ், விஜய்யின் மகன் சஞ்சய் மூன்று பேருமே நெருங்கிய நண்பர்கள். முன்பு அடிக்கடி வெளியில் சந்திப்பவர்கள், இப்போது தனித்தனியாக தங்கள் பாதையிலும் பணிகளிலும் மூழ்கியுள்ளனர். எனினும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்திக்கத் தவறுவதில்லையாம்.

அவ்வாறு சந்திக்கும்போது, தங்களுடைய எதிர்காலத் திட்டங்கள், தற்போது ஈடுபட்டுள்ள பணிகள் குறித்தும் விவாதிக்கிறார்கள். “நண்பர்களுக்குப் பயன்படும் வகையில் ஏதாவது தகவல் கிடைத்தால், நண்பர்களுக்கு உதவக்கூடிய யாரையேனும் சந்தித்தால் உடனடியாக அதுகுறித்துப் பகிர்ந்துகொள்வோம்,” என்கிறார் துருவ் விக்ரம்.

குறிப்புச் சொற்கள்