புலனாய்வுப் படத்தில் கிருஷ்ணா

புலனாய்வுப் படத்தில் கிருஷ்ணா

1 mins read
bd34d1a6-db0c-4f08-b993-446938965471
கிருஷ்ணா. - கோப்புப் படம்: என்டிடிவி
Google News Preferred Icon

‘கற்றது களவு’, ‘கழுகு’, ‘யாமிருக்க பயமே’ போன்ற வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் கிருஷ்ணா.

‘ஜோஸ்வா: இமை போல் காக்க’ படத்திற்குப் பிறகு, தற்போது மீண்டும் புலனாய்வுத் திகில் படம் ஒன்றில் நாயகனாக நடிக்க உள்ளார்.

‘மர்டர் இன் டவுன்’ எனத் தலைப்பிடப்பட்ட அப்படத்தை பாலகிருஷ்ணன் இயக்குகிறார். பிந்து மாதவி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

மனு மந்த்ரா கிரியேஷன்ஸ், ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ், யாத்ரா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பால சரவணன், வைபவ் முருகேசன், ஆர். பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், சரவணன் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் தோன்றுவர்.

“புலனாய்வுப் பின்புலம் கொண்ட இப்படத்துக்கு கிருஷ்ணா சரியாகப் பொருந்துவார். அதிலுள்ள திகில் காட்சிகள் பரபரப்பாக இருக்கும். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்கிறார் இயக்குநர் பாலகிருஷ்ணன்.

குறிப்புச் சொற்கள்