தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரையரங்குகளில் 50 நாள்களைக் கடந்து சாதித்த ‘குடும்பஸ்தன்’

1 mins read
3411b278-7ddb-4a2e-84fd-c6cd5aa27f98
‘குடும்பஸ்தன்’ படக்குழு வெளியிட்ட புதுச் சுவரொட்டி. - படம்: ஊடகம்

மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம், வெற்றிகரமாக 50 நாள்கள் கடந்துள்ளது.

ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் இதுவரை 28 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதாம்.

அண்மையில் ஓடிடி தளத்திலும் இப்படத்தை வெளியிட்டுள்ளனர். ‘லவ்வர்’, ‘குட் நைட்’ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை அளித்த மணிகண்டன், தற்போது ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளார்.

50வது நாளைக் கடந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், இப்படக்குழுவினர் புதிய சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்